கேரளாவில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று
கேரள மாநில தொழில் துறை மந்திரி இ.பி. ஜெயராஜனுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீ போல பரவும் கொரோனா தொற்றுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. களப்பணியில் உள்ள பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில், கேரள மாநில தொழில் துறை மந்திரி இ.பி. ஜெயராஜனுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிதி அமைச்சருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஆகியோர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story