11 மாத தங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா


11 மாத தங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா
x
தினத்தந்தி 11 Sept 2020 5:32 PM IST (Updated: 11 Sept 2020 5:32 PM IST)
t-max-icont-min-icon

11 மாத தங்கையிடம் பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற 5 வயது அக்கா மீது போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விசாகபட்டினம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு நிர்மலா (5 வயது) ஹேமஸ்ரீ (11 மாதக்குழந்தை) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2வது மகள் பிறந்தவுடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில் பக்கத்து வீட்டில் தூங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணாமல் போயுள்ளார். ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர், பின்னர் குழந்தை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தனர். எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று நிர்மலா அப்பாவியாக கூறியுள்ளார். 
இதனையடுத்து சிறுமி நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Next Story