திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்து வர அனுமதி


திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்து வர அனுமதி
x
தினத்தந்தி 11 Sept 2020 6:34 PM IST (Updated: 11 Sept 2020 6:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்து வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

திருமலை,

திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது.

அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம் என்றும், ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

புரட்டாசி மாதத்தில் தமிழகத்திலிருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story