மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
போபால்,
நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டுள்ளார்.
தற்போது மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் காங்கிரசின் கமல் நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. முன்னதாக 25 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தனர். மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்ததையடுத்து மத்திய பிரதேசத்தில் 27 இடங்கள் காலியானவையாக அறிவிக்கப்பட்டன.
Related Tags :
Next Story