கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணம், நகைகளை கொள்ளை அடித்த கொள்ளையர்கள்!


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணம், நகைகளை கொள்ளை அடித்த கொள்ளையர்கள்!
x
தினத்தந்தி 11 Sept 2020 9:07 PM IST (Updated: 11 Sept 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் நகைக்கடைக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி துப்பாக்கியை காட்டி பணம் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் பிரபலமான நகை கடை உள்ளது. இன்று வழக்கம் போல் கடைக்கு மாஸ்க் அணிந்து வந்த மூன்று இளைஞர்கள், கடை முன்பாக நின்றிருந்த ஊழியரிடம் தங்களை கைகளை காட்டி சானிடைசரால் சுத்தப்படுத்திக்கொண்டனர்.

திடீரென அடுத்த நொடியில் , அந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை காட்டி கடை ஊழியர்களை மிரட்டினார். பின்னர் கடை முன்பாக டேபிளில் வைக்கப்பட்டிருந்த நகைகள், இரும்பு பீரரோவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து எந்தவித பதற்றமும் இன்றி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் நகை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் போல் வந்த இளைஞர்கள் திடீரென துப்பாக்கியை காட்டி பணம் நகைகள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story