பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக தேவேந்திர வி.தர்தா தேர்வு


பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக தேவேந்திர வி.தர்தா தேர்வு
x
தினத்தந்தி 12 Sept 2020 3:41 AM IST (Updated: 12 Sept 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக தேவேந்திர வி.தர்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை,

பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவுக்கு(ஏபிசி) 2020-2021-ம் ஆண்டுக்கான தலைவராக லோக்மத் ஊடக குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் தேவேந்திர வி.தர்தா தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார். துணைத் தலைவராக (விளம்பரதாரர் பிரிவு) ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த கருணேஷ் பஜாஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுச் செயலாளராக எச்.பி.மசானி தேர்வாகி உள்ளார்.

மேலும், தணிக்கை குழுவின் உறுப்பினர் பதவிக்கு பதிப்பாளர்கள் தரப்பு பிரதிநிதிகளாக 8 பேரும், விளம்பரதாரர் தரப்பு பிரதிநிதிகளாக 3 பேரும், விளம்பர ஏஜென்சி தரப்பு பிரதிநிதிகளாக 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story