ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராஜ்நாத் சிங்


ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 12 Sept 2020 6:02 PM IST (Updated: 12 Sept 2020 6:02 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மும்பையில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை தாக்கிய புகாரில் சிவசேனாவை சேர்ந்த கமலேஷ் கடாம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிவசேனாவுக்கு எதிரான குறுஞ்செய்தியை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்தது தொடர்பாக கொலை மிரட்டல் வந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்கு வந்து சரமாரியாக தாக்கியதாக மதன்சர்மா புகார் அளித்தார். இதனிடையே அவரை போலீசார் வந்து அழைத்து சென்றதாக அவரது மகள் ஷீலா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பையில் குண்டர்களால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மதன் ஷர்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன்.

முன்னாள் படைவீரர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மோசமானவை. மதன் ஷர்மா ஜி விரைவில் குணமடையவேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story