உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.36 லட்சம் நகைகள் கொள்ளை


உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.36 லட்சம் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 13 Sep 2020 1:35 AM GMT (Updated: 13 Sep 2020 1:35 AM GMT)

உத்தரபிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் பன்னாதேவி பகுதியில் ஒரு நகைக்கடை உள்ளது. மதியம் 2 மணியளவில் இந்த நகைக்கடைக்கு முககவசம் அணிந்து வாடிக்கையாளர் போல் 3 வாலிபர்கள் வந்தனர். கடையில் கிருமிநாசினியால் கைகளை சுத்திகரித்து கொண்ட அவர்கள் திடீரென நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை அள்ளிச்சென்றனர்.

இதை கண்டு நகைக்கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி உள்ளன.

Next Story