மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Sept 2020 1:55 PM IST (Updated: 13 Sept 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான போரை சரியாக திட்டமிடாமல் நடத்துவதால் இந்தியா படுகுழியில் விழுந்து இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டரில் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி 24 சதவீதம் குறைந்து இருப்பதாகவும், 12 கோடி வேலைவாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும், ரூ.15½ லட்சம் கோடி கூடுதல் கடன் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அளவில் கொரோனா பாதிப்பும், சாவும் மிகவும் உயர்ந்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இவ்வளவு பாதிப்புகள் இருந்தும், இந்தியாவில் நிலைமை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறுவதாகவும் அவர் குறை கூறி உள்ளார்.

Next Story