கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட 'எனது குடும்பம்-எனது பொறுப்பு' என்ற பிரச்சாரத்தை தொடங்கினார் உத்தவ் தாக்கரே
மகாராட்டியத்தில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட 'எனது குடும்பம்-எனது பொறுப்பு' என்ற பிரச்சாரத்தை அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு, நாள் கொரோனா பாதிப்பு தீவிரமாகிக்கொண்டே போகிறது. இதிலும் மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் 'எனது குடும்பம்-எனது பொறுப்பு' எனும் புதிய பிரசாரத்தை அம் மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் மும்பை மாநகராட்சி இன்று பதிவிட்டுள்ளதாவது:
"கொரோனா இல்லாத மும்பையை உருவாக்க, தனிப்பட்ட முறையிலும், குடும்பமாகவும் மற்றும் சமூகத்தின் படிநிலையாகவும் அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம்.
மாநகராட்சி வெளியிட்ட அறிவிக்கையில்,
1. குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.
2. தவறாமல், முறையாக முகக் கவசம் அணிய வேண்டும். 3. அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் கைகளை சானிடைசர் திரவத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தின் கீழ், மும்பை மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகி அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க உள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, மராட்டியத்தில் தற்போது 2,80,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,28,512 பேர் குணமடைந்துள்ளனர், 29,115 பேர் பலியாகியுள்ளனர்.

Related Tags :
Next Story