மும்பையில் மேலும் 2,085 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் மேலும் 2,085-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,085-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 41-பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 693-ஆக உள்ளது.
தொற்று பாதிப்புடன் 30 ஆயிரத்து 271-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 918-பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்து 147-பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story