கொரோனா சூழலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
கொரோனா சூழலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.
முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.
Related Tags :
Next Story