நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் பருவமழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.
காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற இந்திய கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ், முன்னாள் சத்தீஸ்கார் முதல்வர் அஜித் ஜோகி, மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன், உத்தரபிரதேச அமைச்சர்கள் கமல் ராணி, சேதன் சவுகான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக டெல்லி கலவரம் தொடர்பான டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையில் முக்கிய தலைவர்களின் பெயர்களை சேர்த்தது தொடர்பாக பிரேமச்சந்திரன் எம்பி மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
'நீட் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக திமுக நோட்டீஸ் கொடுத்து உள்ளது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கே சுரேஷ் ஆகியோர் "கிழக்கு லடாக்கில் சீன ஊடுருவல்" பிரச்சினை தொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story