தேசிய செய்திகள்

உலக அளவில் தயாரிக்கப்படும் 35 கொரோனா தடுப்பூசிகள்; இந்தியாவில் 8 தடுப்பூசிகள் தற்போதைய நிலை என்ன? + "||" + corona vaccine current position across world wide

உலக அளவில் தயாரிக்கப்படும் 35 கொரோனா தடுப்பூசிகள்; இந்தியாவில் 8 தடுப்பூசிகள் தற்போதைய நிலை என்ன?

உலக அளவில் தயாரிக்கப்படும் 35 கொரோனா தடுப்பூசிகள்; இந்தியாவில் 8 தடுப்பூசிகள் தற்போதைய நிலை என்ன?
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35 வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அவை சரியான தீர்வை தருமா என இதன் தற்போதையை நிலை என்ன என்பதைக் காணலாம்.
புதுடெல்லி

உலகிலேயே ரஷ்யாவில் மட்டுமே "ஸ்புட்னிக் வி" என்ற தடுப்பூசியை பெருவாரியான மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் 2 கட்ட சோதனைகளின் போதே தன்னார்வலர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதால், 3-ஆம் கட்ட சோதனைக்கு செல்லும் முன்பே இந்த தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியதற்கு மருத்துவத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஏடி 5 (Ad-5) - என்கோவ் (nCoV) என்ற தடுப்பூசியை தனியாருடன் இணைந்து ராணுவ மருத்துவ அறிவியல் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இதற்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

ஏடி 5 - என்கோவ்  மற்றும் கொரோனாவேக் என்ற 2 தடுப்பூசிகளை நாடு முழுவதும் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்திக்கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் இந்த 2 தடுப்பூசிகளும் சவுதி அரேபியா, பாகிஸ்தான், பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. அமெரிக்காவில் அரசின் உதவியுடன் தயாராகிவரும் மர்னா 1273 (mRna - 1273 )தடுப்பூசி கடந்த ஜூலை 27-ல் 3-ஆம் கட்ட சோதனைக்குள் நுழைந்தது.

அமெரிக்காவின் 89 இடங்களில் மர்னா 1273 தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுவரும் நிலையில், 10 கோடி டோஸ்களுக்கு, தனியார் நிறுவனத்துடன ஜனாதிபதி டிரம்ப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

அந்த தனியார் நிறுவனம் மர்னா 1273 தடுப்பு மருந்திற்கு அங்கீகாரம் கிடைத்த உடன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 12 கோடி டோஸ்கள் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஏஇசட்டி 1222 (AZD 1222) என்ற தடுப்பூசி 2 கட்ட சோதனைகளில் சிறப்பான முடிவுகளை கொடுத்த நிலையில், இதற்கு அங்கீகாரம் கிடைத்தபின், புனேவை மையமாக கொண்டு இயங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா உடன் கைகோர்த்து உலகிலேயே அதிகபட்சமாக 150 கோடி டோஸ்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் 3-ஆம் கட்ட சோதனை அண்மையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவேக்சின் மனிதர்கள் மீதான சோதனையில் நல்ல பலன்களை கொடுத்துவரும் நிலையில், விலங்குகள் மீதான சோதனையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வெளிக்கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது போல் உலகம் முழுவதும் இதுவரை 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி  மருத்துவசோதனைகளில் உள்ளன
அவைகளில் 35 பேர் மருத்துவ பரிசோதனைகளில் இறுதி கட்டத்தை அடைந்து விட்டன.

8 தடுப்பூச்சிகள் மனித பரிசோதனைகளின் இறுதிகட்டத்தை அடைந்து உள்ளன.இந்தியாவில் குறைந்தது எட்டு தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளனன. இவற்றில் 2 முதல் கட்ட சோதனையை முடித்து 2-வது கட்ட சோதனையில் நுழைந்து உள்ளன.

இந்தியாவில் சோதனையில் உள்ள தடுப்பூசிகள்

* அஸ்ட்ராசெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
* மாடர்னா
* ஃபைசர் / பயோஎன்டெக்
* ஜான்சன் & ஜான்சன்
* சனோஃபி / கிளாஸ்கோ ஸ்மித்க்லைன்
* நோவாவக்ஸ்
* ரஷ்ய தடுப்பூசி, மாஸ்கோ கமலேயா இன்ஸ்டிடியூட் உருவாக்கியது


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் கேட்கிறாரா, விஜய் மல்லையா?
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் விஜய் மல்லையா தஞ்சம் கோர முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் ; உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம்
உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
3. இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது- அமெரிக்கா பாராட்டு
இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்வதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது
4. குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு!
குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - ராணுவ அமைப்பின் தலைவர் தகவல்
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.