"மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான், கனத்த இதயத்துடன வெளியேறுகிறேன்"- நடிகை கங்கனா ரனாவத் வேதனை
மும்பையிலிருந்து புறப்படுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டது இரு மடங்கு உண்மையாகியிருப்பதாக கூறியுள்ளார்.
மும்பை
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதால் சிவசேனா தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் கங்கனா. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒய் - பிளஸ் பாதுகாப்புடன் கடந்த 9ம் தேதி அவர் மும்பை வந்தார். அவருக்கு எதிராக தாக்குதல்கள் வீடு மற்றும் அலுவலகம் இடிப்பு என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். மேலும், அவர் மகாராஷ்டிர அரசு மீதும் முதல்வர் உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நடிகை கங்கனா, மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேற்று திடீரென சந்தித்து புகார் அளித்தார்.
தற்போதுகங்கனா ரனாவத் கனத்த இதயத்துடன் மும்பையிலிருந்து வெளியேறுவதாக டுவிட்டரில் பதிவிட்டுளார்.
மேலும் தொடர் தாக்குதல்கள், தனது வீடு மற்றும் அலுவலகத்தை இடிக்க நடந்த முயற்சி என மும்பையில் தங்கியிருந்த நாட்களில் தான் அச்சுறுத்தலுக்கு ஆளான விதம், தனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பு ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டதை இரு மடங்கு உண்மையாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story