மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை


மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 14 Sep 2020 12:48 PM GMT (Updated: 14 Sep 2020 12:48 PM GMT)

மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கிரிக்கெட் போட்டியில் நடுவர்தான் முக்கியமானவர் அதுபோல் இங்கு சபாநாயகருக்கு முக்கியப் பொறுப்புள்ளது. ஹரிவன்ஸ் தனது பொறுப்புகளை 2 ஆண்டுகள் சிறப்பாக செய்தார். கூட்டத்தொடரை திறம்பட நடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாநிலங்களவை தலைவர், துணைத்தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம். அதுபோல் இந்த கூட்டத்தொடரின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானது. நம் திறமையை ஒன்றிணைத்து கடமையை சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story