பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம்18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 9 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Tags :
Next Story