கொரோனா தடுப்பூசிகள் 2024-ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை: சீரம் நிறுவன தலைவர்


கொரோனா தடுப்பூசிகள் 2024-ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை:  சீரம் நிறுவன தலைவர்
x
தினத்தந்தி 14 Sept 2020 11:21 PM IST (Updated: 14 Sept 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசிகள் 2024-ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை என்று அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க  5 வருடங்கள் வரை ஆகலாம் என்று சீரம்  இன்ஸ்ட்டியூட் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து  ஆஸ்ட்ராஜெனகா நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம்  பரிசோதித்து வருகிறது.  இந்த மருந்துகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில்  பொது பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்,   சீரம்  இன்ஸ்ட்டியூட் நிறுவன தலைவர் அடால் பூனாவல்லா  நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  கொரோனா தடுப்பூசிகள் 2024-ஆம் ஆண்டு வரை போதிய அளவு கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-   உலக அளவில் 15 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டறியப்படும் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக இருந்தால், அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் கிடைக்க குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். 

எனவே  2024-ம் ஆண்டு வரை கொரோனா தடுப்பூசிக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது. உலக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்க மருந்து நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை” என்றார். 

Next Story