பிரதமர் மோடி மயில் பராமரிப்பில் தீவிரமாக இருப்பதாக ராகுல் காந்தி கிண்டல்


பிரதமர் மோடி மயில் பராமரிப்பில் தீவிரமாக இருப்பதாக ராகுல் காந்தி கிண்டல்
x
தினத்தந்தி 15 Sept 2020 1:21 AM IST (Updated: 15 Sept 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மயில் பராமரிப்பில் தீவிரமாக இருப்பதாக ராகுல் காந்தி கிண்டலாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்து உள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கொரோனா தொற்று எண்ணிக்கை இந்த வாரத்துக்குள் 50 லட்சத்தை கடந்து விடும். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை தாண்டிவிடும். ஒரு மனிதரின் ஆணவத்தால் திட்டமிடாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும் கொரோனா பரவி விட்டது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மோடி அரசு சுயசார்பை போதிப்பதாகவும், அதற்கான பொருள் உங்கள் வாழ்க்கையை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்பதாகும் என கூறியுள்ள ராகுல் காந்தி, ஏனெனில் மயில் பராமரிப்பில் பிரதமர் தீவிரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது இல்லத்தில் மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோ பதிவு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதை கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story