மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலி
மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலியாகி உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி வரும் போலீசாரை கொரோனா தொற்று வேகமாக துரத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 371 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 756 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஒரேநாளில் 8 போலீசார் கொடிய கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். எனவே பலியான போலீசாரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. இதில் 20 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.
பாதிக்கப்பட்ட போலீசாரில் 15 ஆயிரத்து 830 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர். இன்னும் 3 ஆயிரத்து 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story