இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது - ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்
இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
தொழில்துறை அமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-
இந்திய பொருளாதாரம் நிலையான தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது. பணப்புழக்கத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய வங்கி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தரவு கொரோனா தொற்று அழிவுகளின் பிரதிபலிப்பு ஆகும். பொருளாதார மீட்சி இன்னும் முழுமையாக இன்னும் நிலைநிறுத்தப்படவில்லை. மீட்பு படிப்படியாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிசர்வ் வங்கி 2020 மார்ச் மாதத்திலிருந்து ரெப்போ விகிதத்தை 115 அடிப்படை புள்ளிகளால் 4% ஆகக் குறைத்தது. குறைந்த வட்டி வீதமும் அதிக பணப்புழக்கமும் அரசாங்கத்திற்கு குறைந்த கடன் செலவை உறுதி செய்யும்.
பணப்புழக்க நிலைமையை எளிதாக்குவதற்கும், தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு நிதி கிடைக்க மத்திய வங்கி எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தாஸ் கூறினார்.
மேலும் அவர்கூறும் போது:
கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு தொழில் மற்றும் வணிகங்களுக்கு உதவ "ரிசர்வ் வங்கி போருக்குத் தயாராக உள்ளது ... எந்தவொரு நடவடிக்கைகளும் ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும். உலக அளவில் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட புதிய வாய்ப்புகளைப் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
வளர்ந்து வரும் சந்தைகள் மீண்டும் முன்னேறியுள்ளன மற்றும் கொள்கை ரெப்போ விகிதங்களைக் குறைப்பது முக்கிய செயல்பாடுகளை தளர்த்தியுள்ளது. கார்ப்பரேட் பத்திர சந்தையில் ரூ .3.2 டிரில்லியன் பத்திர வெளியீடு ஆகஸ்ட் 28 வரை நடந்துள்ளது என கூறினார்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9 சதவீதம் குறைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story