புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை


புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை:  பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2020 3:21 PM IST (Updated: 16 Sept 2020 3:21 PM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி: 

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து வந்த  புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என்று மத்திய அரசு கூறியது இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

புலம்பெயர்ந்தோர் இறப்பு மற்றும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் இவ்வாறு பதில் அளித்தார்.

இது குறித்து காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டில்

"ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர், எத்தனை வேலைகள் இழந்தன என்பது மோடி அரசுக்குத் தெரியாது. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், இறப்புகள் நடக்கவில்லையா? அரசாங்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர்களின் இறப்பை உலகம் கண்டது. எந்த தகவலும் இல்லாமல் மோடி அரசு உள்ளது என கூறி இருந்தார்.

"ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் குறித்த தரவுகளை சேகரிக்க நகராட்சி மட்டத்தில் எந்தவொரு வழிமுறையும் இல்லை. இந்த விவகாரத்தில் தொழிலாளர் அமைச்சகம் எடுத்த நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவது முதிர்ச்சியற்றது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட அளவுருக்களின் படி நகராட்சி மட்டத்தில் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா நெருக்கடியின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செய்த நலத்திட்டங்கள்  குறித்து தெளிவுபடுத்தும் குறிப்பை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டது.

கொரோனா தொற்றுநோய்களின் போது இந்தியா முழுவதும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அரசாங்கம் "முன்னோடியில்லாத நடவடிக்கைகளை" எடுத்துள்ளது என அதில் கூறப்பட்டு இருந்தது.



Next Story