லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது


லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது
x
தினத்தந்தி 16 Sep 2020 3:13 PM GMT (Updated: 16 Sep 2020 3:13 PM GMT)

லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் மேற்கொளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி: 

கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றத்தின் மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமான நடவடிக்கைகள் காணப்பட்டன. "சீனப் பக்கத்தில் குடிசை போன்ற கட்டமைப்புகள், நேபாளத்தின் டிங்கர்-லிப்பு பாஸுக்கு மிக அருகில் காணப்பட்டன.

சம்பா மைதானத்தின் ஜோஜோ கிராமத்தின் பொதுப் பகுதியின் சீனப் பகுதியில் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டது. ஜோஜோ கிராமம் நேபாளத்தின் டிங்கர்-லிபு பாஸிலிருந்து ஏழு முதல் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நேபாளத்தைத் தொடும் உத்தரகாண்ட் எல்லைகளுக்கு அருகே சீன  இராணுவத் துருப்புக்களின் நகர்வுகள் குறித்து இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் இப்போது உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பதற்றம் அதிகரித்த நிலையில், லிபுலேக் பகுதியில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளை "உன்னிப்பாக கண்காணிக்க" நேபாள அரசாங்கம் தனது படைகளுக்கு அறிவுறுத்தியதாக இந்திய உளவுத்துறை கூறி உள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் சீனா இடையே உத்தரகாண்ட் மாநிலத்தின் கலபாணி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு முக்கோண சந்திப்பு லிபுலேக் ஆகும்.மேலும் லிபுலேக்கில், என்ஏபிஎப்பின் 44 பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது.லிபுலேக்கில் சீனா தனது துருப்புக்களை நிறுத்தியுள்ளது என்பதும் கண்டறியப்பட்டது.

Next Story