அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 394- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாமில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 969 ஆக உள்ளது. தொற்றில் இருந்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 900-பேர் குணம் அடைந்த நிலையில் 31 ஆயிரத்து 555 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் 511 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல்களை சுகாதார்த்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story