மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதில் மாற்றமா?மந்திரி ஜிதேந்திரசிங் பதில்
மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
புதுடெல்லி,
மத்திய, மாநில அரசு பணிகளில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை ஓய்வு பெற செய்வதற்கான திட்டம் எதுவும் உள்ளதா என்று நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில், “மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மாற்ற எந்த திட்டமும் இல்லை. மாநில அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில், அந்தந்த மாநில அரசுகள் வடிவமைக்கிற விதிகள், ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story