பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் கூறுகையில், பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Wishing PM Narendra Modi ji a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2020
Related Tags :
Next Story