பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பாகிஸ்தான் சதி முறியடிப்பு

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பாகிஸ்தான் சதி முறியடிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 5:15 AM GMT (Updated: 2020-09-17T10:45:54+05:30)

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பாகிஸ்தான் சதி முறியடிப்பு

ஜம்மு: 

ஸ்ரீநகரின் படமலூ பகுதியில் இன்று நடந்த பாதுகாப்புபடையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லப்பட்டனர். படமலூவின் ஃபிரதவுசாபாத் பகுதியில் தேடுதல் தேட்டையின் போது பாதுகாப்புப் படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

​​வீடு ஒன்றிற்குள் பதுங்கி இருந்த  பயங்கரவாதிகள், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீநகர் நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அமைதியை சீர்குலைப்பதற்காக தேச விரோத சக்திகளின் மோசமான வடிவமைப்பை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்கவுன்டர் இடத்திலிருந்து ஏ.கே. துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் நகரின் மையத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சதி முறியடிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story