விளையாட்டு துறையில் பயிற்சிக்காக ரூ.1,757.42 கோடி நிதி ஒதுக்கீடு; மக்களவையில் தகவல்


விளையாட்டு துறையில் பயிற்சிக்காக ரூ.1,757.42 கோடி நிதி ஒதுக்கீடு; மக்களவையில் தகவல்
x

விளையாட்டு துறையில் பயிற்சி அளிக்க உள்ளிட்ட வகையில் ரூ.1,757.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மக்களவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சிறந்த வீரர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி மக்களவையில் மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சக இணை மந்திரி (தனிபொறுப்பு) கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ தகவலில், விளையாட்டு துறைக்கான திட்டங்களின் கீழ் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக நடப்பு 2020 முதல் 2021ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதன்படி, இந்திய விளையாட்டு கழகத்திற்கு ரூ.500 கோடி, சிறப்பு விருதுகளுக்கு ரூ.38 கோடி, தேசிய விளையாட்டு விருதுகளுக்கு ரூ.2 கோடி, விளையாட்டு துறையில் மெரிட் அடிப்படையில் சிறந்த நபர்களுக்கான பென்சனுக்கு ரூ.30 கோடி, தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு நிதியுதவியாக ரூ.245 கோடி, தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதிக்கு ரூ.50 கோடி, விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாயர் தேசிய நல நிதிக்கு ரூ.2 கோடி, கேலோ இந்தியாவுக்கு ரூ.890.42 கோடி என மொத்தம் ரூ.1,757.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Next Story