ஆந்திராவில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 Sept 2020 9:35 PM IST (Updated: 17 Sept 2020 9:35 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,01,462 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஆந்திராவில் 72 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,177 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,08,088 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது 88,197 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story