உத்தர பிரதேசத்தில் பிரதமர் தொகுதியின் ரெயில்வே நிலைய பெயர் மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல்


உத்தர பிரதேசத்தில் பிரதமர் தொகுதியின் ரெயில்வே நிலைய பெயர் மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Sep 2020 4:11 PM GMT (Updated: 17 Sep 2020 4:11 PM GMT)

உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட ரெயில்வே நிலையத்தின் பெயரை பனாரஸ் என மாற்றுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட மண்டுவாதி ரெயில்வே நிலையத்தின் பெயர் பனாரஸ் என மாற்றப்படும் என்று வாரணாசி வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்திர ஜெய்ஸ்வால் கூறினார்.  இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது என அவர் கூறினார்.

இதுபற்றிய அறிவிப்பு கடந்த ஆகஸ்டில் வெளியானது.  இந்நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.  இதனை தொடர்ந்து இதற்கு கவர்னர் ஆனந்தி பட்டேல் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதற்கு முன் முகல்சராய் மற்றும் அலகாபாத் ரெயில்வே நிலையங்களின் பெயர்கள் முறையே பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மற்றும் பிரயாக்ராஜ் ரெயில் நிலையங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

Next Story