மாநிலங்களவை எம்.பி. அசோக் காஸ்தி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்


மாநிலங்களவை எம்.பி. அசோக் காஸ்தி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 17 Sept 2020 11:43 PM IST (Updated: 17 Sept 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை எம்.பி. அசோக் காஸ்தி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி.யுமான அசோக் காஸ்தி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசோக் காஸ்தி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இவர் இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றிருந்தார். உயிரிழந்த அசோக் காஸ்தி எம்.பி.க்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மாநிலங்களவை எம்.பி. அசோக் காஸ்தி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மாநிலங்களவை எம்.பி. அசோக் காஸ்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.  சமூகத்தில் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

Next Story