மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் படேலுக்கு கொரோனா தொற்று
மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போபால்,
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, சாமானிய மக்களை மட்டுமல்ல, அரசியல் தலைவர்களையும், முதல்-மந்திரிகளையும், மத்திய மந்திரிகளையும், கவர்னர்களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் தன் பிடியில் சிக்க வைத்துள்ளது.
அந்த வகையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிதின் கட்காரி, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி, அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திர ஷெகாவத், சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளான அரசியல் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வரிசையில் இப்போது மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலும் (வயது 60) சேர்ந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், தாமோ தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை செவ்வாய்க்கிழமையன்று சந்தித்தவர்கள் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.

Related Tags :
Next Story