வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி
வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்த மசோதாக்கள் எனவும் நாட்டின் வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு இது முக்கிய தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ள மோடி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், உண்மையிலேயே விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள் இவை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் பல சக்திகள் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Related Tags :
Next Story