சம்பள குறைப்பு மசோதா: சேமிப்பு தொகை ரூ.4 கோடி, மசோதா விவாத செலவு ரூ.6 கோடி; தி.மு.க. எம்.பி. காட்டம்


சம்பள குறைப்பு மசோதா:  சேமிப்பு தொகை ரூ.4 கோடி, மசோதா விவாத செலவு ரூ.6 கோடி; தி.மு.க. எம்.பி. காட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2020 3:07 PM IST (Updated: 18 Sept 2020 3:07 PM IST)
t-max-icont-min-icon

சம்பள குறைப்பு மசோதாவால் குறைக்கப்படும் தொகை ரூ.4 கோடி என்றும் மசோதா விவாத செலவு ரூ.6 கோடி என்றும் தி.மு.க. எம்.பி. வில்சன் அவையில் இன்று பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேலவை இன்று கூடியதும், எம்.பி. அசோக் கஸ்தி மறைவுக்கு அவை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்து பேசினார்.  இதன்பின்பு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினர்.  பா.ஜ.க. எம்.பி. அசோக் பாஜ்பாய், காணாமல் போன குழந்தைகள் விவகாரத்தில் பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினார்.

வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்காக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினார்.

இந்த சூழலில், மேலவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  சம்பள குறைப்பு மசோதா பற்றி மேலவையில், தி.மு.க. எம்.பி. வில்சன் எழுந்து நின்று பேசும்பொழுது, இந்த மசோதாவால் குறைக்கப்படும் தொகை சுமார் ரூ.4 கோடி.  ஆனால், மசோதாவை விவாதிப்பதால் ஆகும் செலவு ரூ.6 கோடி என பேசினார்.

நாடாளுமன்ற அவையை ஆளும் கட்சி எப்படி வீணடிக்கிறது என்பதற்கு சம்பள குறைப்பு மசோதா உதாரணம்.  நாங்கள் மசோதாவை எதிர்க்கவில்லை.  நாங்களாகவே நிதி தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

Next Story