தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடியில் மேம்பாடு இந்திய விமானநிலையங்கள் ஆணையம் அறிவிப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.) இது பற்றி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் கீழ் விமான ஓடுதளத்தை அகலப்படுத்துதல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் நிர்மாணித்தல், புதிய விமான முனைய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடக்க இருக்கிறது.
இந்த மேம்பாட்டுத் திட்டம் மொத்தம் ரூ.381 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விமான முனைய கட்டிடம் மட்டும் 13 ஆயிரத்து 530 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. இதில் 600 பயணிகளை அதிகபட்சமாக கையாள முடியும்.
விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப மையம், தீயணைப்பு நிலையம், 5 விமான ‘பார்க்கிங்’ பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்டவையும் இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story