காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2020 6:41 AM IST (Updated: 19 Sept 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.

ஜம்மு, 

காஷ்மீரில் எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் வீசப்பட்ட 4 வெடிகுண்டுகள் வெடிக்காமல் கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த குண்டுகளை கைப்பற்றினர். பின்னர் தனி இடத்திற்கு கொண்டு சென்று அந்த வெடிகுண்டுகளை அழித்தனர்.

Next Story