புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல; தி.மு.க. எம்.பி. சண்முகம் மேலவையில் பேச்சு


புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல; தி.மு.க. எம்.பி. சண்முகம் மேலவையில் பேச்சு
x
தினத்தந்தி 19 Sep 2020 10:13 AM GMT (Updated: 19 Sep 2020 10:13 AM GMT)

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் தி.மு.க. மேலவை எம்.பி. சண்முகம் பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நாடாளுமன்ற மேலவை இன்று காலை நடந்து வரும் நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தொற்று நோய் திருத்த மசோதா 2020க்கான தீர்மானத்தினை அவை பரிசீலனைக்காக இன்று தாக்கல் செய்து பேசினார்.  இதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய தி.மு.க. மேலவை எம்.பி. சண்முகம், புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று பேசினார்.

தேவைப்படும்போது மட்டும் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தி கொண்டு, பின்னர் அவர்களை தூக்கி எறிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் அரசு அவர்களை கைவிட்டு விடுவதாகவும் எம்.பி. சண்முகம் வேதனை தெரிவித்து பேசினார்.  இதன்பின்னர் அந்த மசோதாவுக்கு அவையின் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  உறுப்பினர்கள் ஒப்புதலை தொடர்ந்து மேலவையில் இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Next Story