வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: இளைஞர் காங்கிரசார் டெல்லி நோக்கி டிராக்டரில் பேரணி
எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவைக்கு வந்தன.
அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு அவற்றை எதிர்த்தன. மாநிலங்களவியில் இந்த மசோதாக்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் ஸிர்காபூரில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக வரும் போராட்டத்திற்கு பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, விவசாயிகள், இளைஞர் காங்கிரசார் டெல்லியை நோக்கி டிராக்டரில் பேரணியை துவக்கியுள்ளனர்.
Related Tags :
Next Story