வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் மசோதா - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்


வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் மசோதா - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
x
தினத்தந்தி 20 Sept 2020 11:41 AM IST (Updated: 20 Sept 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதா, வரலாற்று சிறப்பு மிக்கது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார். தற்போது மசோதாக்களை நிறைவேற்ற மாநில கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினா்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண் மசோதா, வரலாற்று சிறப்பு மிக்கது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் மசோதா, விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story