மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் -பா.ஜனதா பரிசீலனை
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஆளும் பா.ஜனதா தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஆளும் பா.ஜனதா தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஒரு கட்சியின் அவைத்தலைவர் உள்ளிட்ட 4 எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜனதாவினர் தீவிரமாக பரிசீலித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story