பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர்கள் 49 பேர் கைது -விஜய் ரூபானி தகவல்


பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர்கள் 49 பேர் கைது -விஜய் ரூபானி தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2020 10:30 PM IST (Updated: 21 Sept 2020 10:30 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி சட்டசபையில் பேசியதாவது:-

குஜராத்தின் போர்பந்தரைச் பகுதியில் இருந்து 6 படகுகளிலும் கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதால் செப்டம்பர் 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் அவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

மேலும், மீனவர்களுக்கு தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்த மாநில அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்குகிறது. குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் மீன்பிடி படகுகளில் 5 ஆயிரம் படகுகளில் ஜி.பி.எஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story