8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு


8 எம்.பி.க்களின்  சஸ்பெண்ட்  உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 4:56 AM GMT (Updated: 22 Sep 2020 4:56 AM GMT)

8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி,

மாநிலங்களவை இன்று கூடியதும் அவையில் பேசிய   எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:- 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே தனியார் கொள்முதல் செய்ய முடியாது என்ற மற்றொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் வரை எதிர்க்கட்சிகள் நடப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்கும்’ என்றார். 

பின்னர் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு,  எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது . எம்பிக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல  என்று கூறினார். 

தொடர்ந்து  மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story