ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த இதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தற்போது உருது மற்றும் காஷ்மீரி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த வால்மீகி உள்ளிட்ட சமூகத்தினர் காஷ்மீரில் குடியேற ஒப்புதல் அளித்து அண்மையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த பெரிய நடவடிக்கையாக அலுவல் மொழிகள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story