நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் பயின்று வரும் மாணவர்களில் சிலர் மனஅழுத்தம் உள்ளிட்ட சில விவகாரங்களை முன்னிட்டு திடீரென தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், உடன் படிக்கும் மாணவ மாணவியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன என்றும், இதனால் மனநல சட்ட பிரிவு 29ஐ அமல்படுத்தும்படியும், ஐ.ஐ.டி.களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்க வேண்டும் எனக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கவுரவ் குமார் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் மீது நடந்த விசாரணையில், நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். இதுபோன்ற மனுக்களை தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி ரோஹிண்டன் எப். நாரிமன் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து கவுரவ் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோன்று, மனுதாரர் கவுரவ் குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story