வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவர் - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவர் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் அதிக சுதந்திரம் மற்றும் நியாயமான விலையை பெறுவர் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழிநடத்தி, தனது கட்சியையும் நாட்டையும் பலவீனப்படுத்துகிறது. அரசியல் காரணங்களுக்காகவே வேளாண் மசோதாக்கள் எதிர்க்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும். தங்கள் விளை பொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அரசாங்கத்தின் கொள்கை முடிவு, அது தொடரும். விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியின் எல்லைக்கு வெளியே விற்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story