திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாள்: கஜ வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாளில் காலையில் சர்வபூபாள வாகனத்திலும், இரவில் கஜ வாகனத்திலும் மலையப்பசுவாமி வலம் வந்தார்.
திருமலை,
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. 27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீதி உலா இன்றி, கோவிலுக்குள் மட்டுமே வாகன சேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாளான இன்று காலையில் சர்வபூபாள வாகனத்தில் சுவாமி கோயிலுக்கு உள்ளேயே வலம்வந்தார். இரவு கஜ வாகனத்தில் எழுந்தருளினார்.
இன்று மாலை தங்க ரத உலா வழக்கமாக கோவிலுக்கு வெளியே மாடவீதிகளில் நடைபெறும். கொரோனா காரணமாக தங்கரத உலா ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சர்வபூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி கோவிலுக்கு உள்ளேயே வலம்வந்தார்.
நாளை (25-ம் தேதி) காலை சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருள்வார்.
Related Tags :
Next Story