டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 25 Sept 2020 8:25 AM IST (Updated: 25 Sept 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள திகார் சிறையின் பொது இயக்குனராக இருந்து வருபவர் சந்தீப் கோயெல்.  இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

நாட்டில் மிக பெரிய சிறைச்சாலையான திகார் சிறையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்க கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளன.  திகார் சிறையில் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு இறுதியில் 60க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.  எனினும், அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.  மற்ற கைதிகள் குணமடைந்து சென்றனர்.

Next Story