மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து


மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 26 Sep 2020 6:04 AM GMT (Updated: 26 Sep 2020 6:04 AM GMT)

மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்கின் 88வது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.

அவரது பிறந்தநாளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க இறைவனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story