பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை


பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை
x
தினத்தந்தி 26 Sep 2020 11:19 AM GMT (Updated: 26 Sep 2020 11:19 AM GMT)

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி,

.பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில்  தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜகவின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார்.

 முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story