பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து


பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள்  அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 26 Sep 2020 11:21 AM GMT (Updated: 26 Sep 2020 11:27 AM GMT)

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் குழு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது, கட்சி அதன் புதிய தலைவராக ஜே.பி.நட்டாவை நியமித்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்து உள்ளது.

மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சரோஜ் பாண்டே, ராம் மாதவ் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் தேசிய பொதுச் செயலாளர்களாக நீக்கப்பட்டுள்ளனர். கட்சியில் தேசிய பொதுச் செயலாளர்கள் பட்டியலில் துஷ்யந்த் குமார் கவுதம், டி. புரந்தேஸ்வரி, சி.டி.ரவி, தருண் சுக் மற்றும் திலீப் சைகியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

பாஜவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. இதற்கான பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். 

பி.எல்.சந்தோஷ் தொடர்ந்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். வி சதீஷ், சவுதன் சிங் மற்றும் சிவ் பிரகாஷ் ஆகியோர் தொடர்ந்து தேசிய இணை செயலாளர்களாக உள்ளனர்.

கட்சியின் பொருளாளராக ராஜேஷ் அகர்வாலை நியமிப்பதாக பாஜக அறிவித்துள்ளது; நரேந்திர மோடி அமைச்சரவையில் தற்போதைய பியூஷ் கோயல் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் 2014 முதல் இந்த பதவி காலியானது.

நாடாளுமன்ற உறுப்பினரான சுதிர் குப்தா இணை பொருளாளராக இருப்பார்.

தேசிய துணைத் தலைவர்கள் விவரம் வருமாறு:-

மேற்கு வங்காளத் தலைவர் முகுல் ராய், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபார் தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரேகா வர்மா, அன்னபூர்ணா தேவி, பாரதீபென் ஷியால், டி.கே.அருணா, ராதா மோகன் சிங் (தேசிய துணைத் தலைவர்கள்)  எம் சுபா ஓஓ மற்றும் ஏபி அப்துல்லாக்குட்டி. முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் ஜெய் பாண்டா ஆகியோருடன் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்கும் உள்ளார்.

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் சுயநலமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவார்கள் என நம்புகிறேன் பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story